சென்னை சென்னை சென்னை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அந்த அறிவிப்பில், "நேற்று (14-11-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-11-2023) காலை 0830 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16 ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18 ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, "இன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.11.2023 முதல் 19.11.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.11.2023 மற்றும் 21.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): டிஜிபி அலுவலகம் (சென்னை) 19, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), காரைக்கால் (காரைக்கால்) தலா 11, அம்பத்தூர் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை) தலா 9, மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) தலா 8, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), திருக்குவளை (நாகப்பட்டினம்), சென்னை (N) AWS (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), தரமணி ARG (சென்னை) தலா 7, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), புவனகிரி (கடலூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), சீர்காழி (மயிலாடுதுறை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), திருவாரூர் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), மண்டலம் 03 புழல் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), வடகுத்து (கடலூர்), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 6, மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), ராயபுரம் (சென்னை), அண்ணாமலை நகர் (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), ஆவடி (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), லால்பேட்டை (கடலூர்), அடையாறு (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), கொத்தவாச்சேரி (கடலூர்), திரு.வி.க நகர் (சென்னை), வனமாதேவி (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), பெருங்குடி (சென்னை), முத்துப்பேட்டை (திருவாரூர்), கடலூர் (கடலூர்), ஆலந்தூர் (செங்கல்பட்டு), மாதவரம் (சென்னை), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 5, சேத்தியாத்தோப்பு (கடலூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), பண்ருட்டி (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), வளசரவாக்கம் (சென்னை), சிதம்பரம் AWS (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), வானூர் (விழுப்புரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கே.எம்.கோயில் (கடலூர்), எண்ணூர் AWS (சென்னை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), புதுச்சேரி (புதுச்சேரி), SRC குடிதாங்கி (கடலூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), புதுச்சேரி AWS (புதுச்சேரி), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), திருவொற்றியூர் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்) தலா 4, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), சோழவரம் (திருவள்ளூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), விழுப்புரம் (விழுப்புரம்), BASL முகையூர் (விழுப்புரம்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), செய்யூர் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), RSCL வல்லம் (விழுப்புரம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) தலா 3, திண்டிவனம் (விழுப்புரம்), திருவள்ளூர் (திருவள்ளூர்), மண்டலம் 05 GCC (சென்னை), கொடவாசல் (திருவாரூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), விருதாச்சலம் (கடலூர்), செந்துறை (அரியலூர்), பாண்டவரடி (திருவாரூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்) தலா 2, சுத்தமல்லி அணை (அரியலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), செஞ்சி (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), RSCL அரசூர் (விழுப்புரம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), திருமூர்த்தி IB (திருப்பூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), தொழுதூர் (கடலூர்), இரணியல் (கன்னியாகுமரி), மீ மாத்தூர் (கடலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), குப்பநத்தம் (கடலூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), பூண்டி (திருவள்ளூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), பாபநாசம் (திருநெல்வேலி), காட்டுமயிலூர் (கடலூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), போளூர் (திருவண்ணாமலை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), செய்யார் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), திருவூர் AWS (திருவள்ளூர்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை) தலா 1." என்று குறிப்பிட்டு உள்ளார்.