Advertisment

ஜப்பான் மாடல்; கோயம்பேட்டில் மெட்ரோவை இணைக்கும் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

மெட்ரோ ரயில் நிலையங்களுடன் பேருந்து நிலையங்கள் இணைப்பு; விரைவில் கோயம்பேட்டில் ஜப்பான் மாடல் புதிய பேருந்து நிலையம் திறப்பு

author-image
Vigneshwari
2 Min read
New Update
Koyambedu

விரைவில் கோயம்பேட்டில் ஜப்பான் மாடல் புதிய பேருந்து நிலையம் திறப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை பேருந்து நிலையங்களுடன் இணைக்கும் பணிகளின் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் ஒன்று திறக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்துடனும் பேருந்து நிலையங்களுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதாவது மெட்ரோவிற்கு எளிதாக செல்லும் வகையில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் சென்னையில் இரண்டாம் கட்டமாக கட்டப்படும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் ஏற்கனவே கோயம்பேடு ரூட்டில் உள்ள மெட்ரோ நிலையங்களை எளிதாக இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000; பேங்க் ஸ்டேட்மென்ட் உட்பட 4 ஆவணம் தேவை: ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

தற்போது கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கும் அரும்பாக்கத்திற்கும் இடையில் 2.5 ஏக்கரில் இந்த இணைப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு வசதியாக மெட்ரோ அருகே இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலங்களில் சில மெட்ரோ நிலையங்களுக்கு அருகே பேருந்து நிலையம் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் மெட்ரோவிற்கு மேல் பேருந்து நிலையங்கள் இருக்கும். அதேபோல், மெட்ரோவுக்கு அருகில் அமையும் வகையில் கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

Advertismentdesktop ap 2 1

சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் மையமாக இருந்த நிலையில், இரண்டாம் கட்டத்திற்கு ஓ.எம்.ஆர் மையமாக இருக்கும்.

இந்த நிலையில்தான் ஓ.எம்.ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள்முடிந்து 2027ல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம்,மேட்டுக்குப்பம், பி.டி.சி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி, காந்தி நகர், சிறுசேரி 2, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.

Advertismenthello this i a text

116 கிமீ இரண்டாம் கட்டம் ரூ.61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாதவரம்முதல் சிப்காட் வரையிலான 45.4 கிமீ பணிகளில் முடியும் 20 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்- பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதனிடையே ”கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவீதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன” என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றோம், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

pitch deck
Advertisment
Advertisment
Advertisment